High-quality dried grapes, also known as raisins. It has a pure quality. Grapes can be dried in driers or under the sun to produce dry grapes.Dry grapes are everyone's favorite and have a lot of health benefits. Around the world, dry grapes are utilized in cuisine and desserts. Additionally, they are added to food, snacks, and health tonics.
கருப்பு நிறத்தில் கிடைக்கும் உலர் திராட்சையில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா?
ரத்த சோகை, செரிமான கோளாறு, ரத்தத்தில் நச்சு, கொலஸ்டிரால் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு கருப்பு உலர் திராட்சை தீர்வாக அமைகிறது.
செரிமானத்தை எளிதாக்குகிறது : பொதுவாகவே, பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். அதிலும், உலர் கருப்பு திராட்சையில் அதிக நார்ச்சத்து உள்ளது. தினசரி இதனை உண்பது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்தை வழங்கி, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. அது மட்டுமின்றி, செரிமானத்தையும் எளிதாக்குகிறது.தினசரி இந்த உலர் பழத்தை சாப்பிடுவதால், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். செரிமானக் கோளாறுகளான வாயு, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை சரி செய்கிறது. மேலும், திராட்சையில் உள்ள அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், பெருங்குடல் அழற்சி, புற்று, தொற்று உள்ளிட்ட அபாயத்தை குறைக்கும்.
எலும்புருக்கி நோயில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது: ஒரு சில பழங்களில் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம் ஆகிய கனிமங்கள் இருக்கும். வயதாகும் போது ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புகளில் துளைகள் ஏற்படுவது ஆகியவற்றைத் தடுக்க, தினசரி கருப்பு உலர் திராட்சையை சாப்பிட்டு வரலாம்.
புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கிறது: கருப்பு திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து கருப்பு திராட்சை பாதுகாக்கலாம்.வாயுத் தொந்தரவு ஏற்படாமல் இருக்க, கருப்பு நிற உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்த பின்பே சாப்பிட வேண்டும்.
0 Reviews For this Product