Almonds boast an impressive nutrient profile. A 1-ounce (oz), or 28-gram (g), serving of almonds contains :
- Fiber: 3.5 g
- Protein: 6 g
- Fat: 14 g (9 of which are monounsaturated)
- Vitamin E: 48% of the daily value (DV)
- Manganese: 27% of the DV
- Magnesium: 18% of the DV
- a decent amount of copper, vitamin B2 (riboflavin), and phosphorus
This is all from a small handful of almonds, which has 164 calories and 6 grams of carbohydrates, which includes 3.5 grams of fiber.
It is important to note that your body does not absorb about 6% of the fats in almonds because this fat is inaccessible to digestive enzymes.
Almonds are also high in phytic acid, a substance that binds certain minerals and prevents them from being absorbed by the body.
While phytic acid is generally considered a healthy antioxidant, it also slightly reduces the amount of iron, zinc, and calcium your body absorbs from almonds.
நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது இந்த பாதாம் (Almonds). இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். ஆனால் பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்ற கருத்து உண்மை தான். ஊறவைத்த பாதாம் எளிதில் செரிமானம் ஆகும். மேலும், ஊறவைத்த பாதாம், ஆன்டிஆக்ஸிடண்ட்டின்கள் நிறைந்தள்ளது. பாதாம் பருப்பின் வெளிப்புற தோலை நீக்கி சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார். ஏனெனில், சருமத்தில் ஒரு என்சைம் தடுப்பான் இருப்பதால், அது உறிஞ்சுதல் மற்றும் செரிமான செயல்முறையை பாதிக்கும். இந்த ஊறவைத்த பாதாமில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.
பாதாம் ஏன் பலரின் விருப்பமான நட்ஸாக இருக்கிறது? பாதாமில் பல வகையான நன்மைகள் உள்ளன. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வை தருகிறது. தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சினை முதல் வயது முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இது விளங்குகிறது. பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின்களும் பாதாமில் உள்ளது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது. மேற்சொன்ன காரணங்களாலும் பலரும் பாதாமை விரும்பி சாப்பிடுகின்றனர்.
30 கிராம் பாதாமில் தோராயமாக உள்ள சத்துக்கள் : கலோரிகள் -163, நார்ச்சத்து - 3.5 கிராம், புரதம் - 6 கிராம், கார்ப்ஸ் - 2.5 கிராம், கொழுப்பு (Fat) - 14 கிராம், 37% பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் E, 32% பரிந்துரைக்கப்பட்ட மெக்னீசியம், மேலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இந்த பாதாம் கொண்டுள்ளது.
மலச்சிக்கல் : உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளும், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளையும் அதிகம் உண்பதால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகிறது. குறிப்பாக பானிபூரி, மசாலா உணவுகள் உடலுக்கு மோசமானவை. பாதாம் பருப்புகளில் உணவை செரிக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. அவற்றை அதிகம் உண்பவர்களுக்கு குடல் சார்ந்த அத்தனை குறைபாடுகளும் நீங்கும். எனவே மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தினம் 5 - 8 ஊறவைத்த பாதம்களை சாப்பிடலாம்.
மூளையை பலப்படுத்தும் : வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே சாப்பிட்டு பழக வேண்டும். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற B வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. இது புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.
தலைமுடி மற்றும் கர்பத்திற்கும் பலன் தரும் : பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையும் போக்குகிறது. பெண்களுக்கு பேறு காலத்தில் சத்து நிறைந்த உணவுகள் கொடுக்க வேண்டியது அவசியமாகும். பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு வருவது, அவர்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் கருவிற்கும் நன்மையை அளிக்கும்.
1 Reviews For this Product
Gokul
quality wise very good